எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் அந்தநல்லூர் ஒன்றிய பகுதிகளில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிட்ட விளம்பர திமுக அரசை கண்டித்தும், திமுக சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்க தலைவர் சின்னத்துரை வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து 11 கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் விளம்பர அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.