தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாகத்தை கண்டித்து தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கியின் சென்னை கிளையில் பணிபுரியும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் விக்னேஷ் மற்றும் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வாட்ஸ்ஆப் குரூப் உருவாக்கியதை தொடர்ந்து, இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு தொழிற்சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், ஊழியர்கள் 2 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையில், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேள பொதுச் செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம், வங்கி ஊழியர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யாவிட்டால் டிசம்பர் 2-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களுடன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். 

Night
Day