தூத்துக்குடி அனல் மின் நிலைய தீ விபத்து - தலைமை பொறியாளர் குழு ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தலைமை பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், வ.உ.சி. துறைமுகம் அருகே தெர்மல் நகர் பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் என மொத்தம் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணி அளவில் உயர் மின் அழுத்தம் காரணமாக அனல்மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 3வது யூனிட்களின் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் மின்சார வயரில் கசிவு ஏற்பட்டு அனல்மின் நிலையத்தில் தீ பற்றியது. துறைமுகம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், அனல்மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2வது ஆகிய  யூனிட்கள் முழுமையாக எரிந்து சேதமாகின. மூன்றாவது யூனிட்டும் பாதிக்கப்பட்டது. 

தீ விபத்து மற்றும் சேத மதிப்பீடுகள் குறித்து தலைமை பொறியாளர் கனி கண்ணன் தலைமையில் சென்னை. மேட்டூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்துள்ள 4 பேர் கொண்ட பொறியாளர் குழுவினர் சேத மதிப்பு குறித்து அனல் மின் நிலையத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவினர் 10 நாட்களுக்குள் சேத மதிப்பு உள்ளிட்டவை குறித்து அரசுக்கு அறிக்கை வழங்கவுள்ளனர். 

Night
Day