தூத்துக்குடி : கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயி நிவாரணம் கிடைக்காததால் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே நிவாரணம் கிடைக்காத விரக்தியில் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயபாண்டியனின் நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால் அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில் ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு அதனை வழங்கவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான விஜயபாண்டியன் தூத்துக்குடியில் உள்ள மகன் அழகர் வீட்டில் நேற்றிரவு பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Night
Day