தமிழகம்
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும்&nbs...
தூத்துக்குடியில் கந்துவட்டி நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிகண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அய்யனேரியை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் முருகன் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். பின்னர் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மேலும் 64 ஆயிரம் கொடுக்கும்படி முருகன் மிரட்டிய நிலையில், ஆறுமுக பாண்டி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன் நடவடிக்கை எடுக்காமல் முருகனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாவட்ட எஸ்.பி. கவனத்திற்கு செல்லவே, உதவி ஆய்வாளர் ஹரிக்கண்னனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும்&nbs...
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கு - ரத்து செய்ய ...