தமிழகம்
குமரி கடற்கரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பட்டி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதை அடுத்து, அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. கோவில்பட்டி. கழுகுமலை, எட்டயபுரம், இளையரசனேந்தல், திருவேங்கடம், உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன லைட்டர்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க கோரி, இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை 10 நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...