தூத்துக்குடி: தேர்தல் நடத்தை விதிமுறைகளால் மீன் வியாபாரிகள் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை அடுத்து மீன்களை வாங்க வியாபாரிகள் குறைவாக வருவதால் நஷ்டம் ஏற்படுவதாக தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தி விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து, மீன்பிடி துறைமுகத்திற்கு வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்களை வாங்க வியாபாரிகள் வருவது கணிசமாக குறைந்துள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை தடுக்க, மீன்வியாபாரிகள் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day