தூத்துக்குடி: பாரம்பரிய கரைவலை மீன்பிடி பணி மீண்டும் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரவு நேரங்களில் கரைவலை மீன்பிடிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் உயர் மின் கோபுரவிளக்குகள் அமைத்து தர வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தூத்துக்குடி மீனவர்கள் பாரம்பரிய வழக்கமான கரைவலை மீன்பிடிப்பை தொடங்கியுள்ளனர். அதன்படி படகில் 3 கிலோ மீட்டர் தூரம்வரை சென்று கடலுக்குள் வலைகளை வீசிவிட்டு கரைக்கு வந்து இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு, வலையை கரைக்கு இழுக்கின்றனர். இதுவே கரைவலை மீன்பிடிப்பு எனப்படுகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் வலைகளை இழுப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லாததால் சிரமம் ஏற்படுதவாகவும், மத்திய மாநில அரசுகள் கடற்கரையில் உயர்மின் கோபுர விளக்குகளை அமைத்துத் தரவேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day