தூத்துக்குடி: 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை கேடிசி நகரை சேர்ந்த முனைவர் கந்தசுப்பு, தெற்கு காரசேரிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான கல் ஒன்றினை பார்த்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வரலாற்றுத்துறை ஆசிரியர் ஜோசப்ராஜ், பழமையான கல்லை பார்வையிட்டார். அப்போது சங்கு சக்கரமும், அந்தணர் ஒருவர் கையில் குடையும், மற்றொரு கையில் கமண்டலும் கொண்டபடி உருவம் இருப்பது தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்பு தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day