தூத்துக்‍குடி: மகளிர் உரிமைத் தொகை கோரி பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கோரி வழங்கப்பட்ட மனுக்‍கள் மீது அதிகாரிகள் நடவடிக்‍கை எடுக்‍காததால், பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி தாலுகாவில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்‍கப்பெறாத பெண்கள், மீண்டும் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். இந்நிலையில், தங்களது மனுக்‍கள் மீது நடவடிக்‍கை எடுக்‍காமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டினர். தகுதியுள்ள பெண்களுக்‍கு மகளிர் உரிமைத் தொகை வழங்காததைக்‍ கண்டித்து, பெண்கள், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கம் எழுப்பினர். 

Night
Day