தூத்துக்‍குடி: மாலத்தீவிலிருந்து தருவைகுளம் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட விசைப்படகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்‍கப்பட்டு அபராதம் விதிக்‍கப்பட்ட தூத்துக்‍குடி விசைப்படகை, அந்நாட்டு அரசு தற்போது, அபராதம் இல்லாமல் நல்லெண்ண அடிப்படையில் விடுவித்துள்ளது. தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள், கடந்த அக்டோபர் மாதம் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பும்போது தவறுதலாக மாலத்தீவு கடற்பகுதிக்குள் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாலத்தீவு கடற்படையினர் விசைப்படகையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து 2 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில் மாலத்தீவு அரசு ஏற்கெனவே மீனவர்களை விடுவித்த நிலையில், தற்போது, அபராதமின்றி நல்லெண்ண அடிப்படையில் படகை விடுவித்தது. அதனை மீனவர்கள் மாலத்தீவு துறைமுகத்திலிருந்து மீட்டு தருவைகுளம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

Night
Day