தூத்துக்‍குடி: வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகியும் அகற்றப்படாத மழைநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்‍குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய வெள்ள நீர் இன்னும் வடியாததால் நோய்த் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக பொதுமக்‍கள் அச்சம் தெரிவிக்‍கின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தூத்துக்‍குடி மாநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகியும், மாநகராட்சிக்கு உட்பட்ட பிஎன்டி காலனி பகுதியில் உள்ள காலி வீட்டு மனைகளில் மழைநீர் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது. அந்த நீரில் பாசி படிந்து இருப்பதுடன் கொசுக்‍கள் உற்பத்தியாகும் இடமாக மாறி, விஷக்‍ காய்ச்சல்கள் ஏற்படும் நிலை இருப்பதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Night
Day