தென் மாகாண பள்ளிகளில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளுக்‍கான டிஜிட்டல் உபகரணங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் தென் மாகாணத்தில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளுக்‍கான டிஜிட்டல் ​உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது.

இலங்கையில் காலியில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை அதிபர் ரணில் விக்‍கிரமசிங்கேயிடம் இந்திய தூதர் சந்தோஷ் ஜா, தென் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு  200 ஸ்மார்ட் வகுப்பறைகளுக்‍கான டிஜிட்டல் ​உபகரணங்களை வழங்கினார். இதில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம​ஜயந்த, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய அதிபர் ரணில் விக்‍கிரமசிங்கே, கல்வித் துறையில் இலங்கைக்கு அளித்து வரும் பல்வேறு உதவிகளுக்‍காக இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். விழாவில் பேசிய இலங்கைக்‍கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, தென் மாகாணத்தின் 3 மாவட்டங்களில் வீடற்ற குடும்பங்களுக்காக ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Night
Day