தென்காசி மாவட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தை தனியாகப் பிரித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் இன்னும் திறக்கப்படாதது ஏன்?. வாடகை கட்டடத்திலேயே இன்னும் செயல்பட்டு வருவதன் காரணம் என்ன?

தென்காசி மாவட்டத்தை தனியாகப் பிரித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் இன்னும் திறக்கப்படவில்லை. வாடகை கட்டடத்திலேயே இன்னும் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தில் அனைத்து துறைகளும் இல்லை. அங்கில்லாத துறைகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடியே செயல்பட்டு வருகின்றன. மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது ஒரே இடத்தில் அனைத்து துறைகளும் இருந்தால் தான் அவர்களுடைய பிரச்சினையை தீர்க்க வழி செய்ய முடியும். தனி மாவட்டம் என பேருக்கு சொல்லிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்காமல் இருக்கிறீர்கள். சென்னையில் உள்ள உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இங்கு தென்காசி மக்கள் படும் அல்லல்களை நீங்கள் பார்க்கவில்லை. 1 மாதத்திற்குள் புதிய அலுவலகங்களை திறந்து, அனைத்து துறைகளையும் அங்கேயே நடத்த வேண்டும். மக்களுக்கு பிரச்சினை கொடுக்காமல் இருப்பதே அரசின் வேலை. அதை நீங்கள் சரியாக செய்யாததால் நான் சுட்டிக்காட்டுகிறேன். ஆட்சி நடத்துபவர்களுக்கு இது புரியவில்லை. புரியாவிட்டாலும் நாங்கள் சொல்வதை செய்யுங்கள்.

Night
Day