தென்காசி: சொகுசுகார் விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு வந்த கணவன், மனைவி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், தந்தையின் இறுதிசடங்குக்காக தனது மனைவியுடன் ராஜபாளையத்திற்கு சென்றுள்ளார். மீண்டும் நெல்லை நோக்கி சொகுசுகாரில் சென்று கொண்டிருந்தனர். நெடுங்குளம் விளக்கு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த குட்டையில் மூழ்கியது. இதில் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி ஆஷா உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

varient
Night
Day