தென்காசி: தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக களையிழந்த ஆட்டுசந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். ரமலான் பண்டிகையானது இன்னும் சில தினங்களில் உலகெங்கும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு ஆயத்தப் பணிகளில் இஸ்லாமிய பெருமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்று வரும் ஆட்டு சந்தையில் விற்பனையானது அமோகமாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் ஏராளமான வெளியூர் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்க முன்வராததால் சந்தை களையிழந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகும் நிலையில் தற்போது 10 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளது. 

Night
Day