தென்காசி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் ஆட்டுச் சந்தை விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.
குறிப்பாக, கேரள மாநில வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்குவதற்காக சந்தையில் குவிந்து வரும் நிலையில், ஆட்டு சந்தையானது  களைக்கட்ட தொடங்கியுள்ளது. 

Night
Day