தென்காசி: 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப் பாம்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கிருஷ்ணாபுரம் பகுதி கொழும்பு செட்டியார் தெருவில் குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை அப்பகுதி மக்கள் அலறி அடித்து கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். குடியிருப்பு பகுதிகள் புகுந்த மலைப்பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை படம் பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day