எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பப்படுகிறது.
விழுப்புரம், சேலம், கும்பகோணம் கோட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களில் இருந்து வரும்போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மாநகரத்திற்குள் செல்லும் பயணிகளின் வசதிக்காக 589 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் கூடுதலாக 104 பேருந்துகள் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.