தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த குழந்தை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் காலியிடத்தில் தேங்கியிருந்த மழை நீரில் குழந்தை தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை உறையசெய்துள்ளது.

தூத்துக்குடி மாநகரில் உள்ள பி அண்ட் டி காலனியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை,  தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர், பதறியடித்து ஓடி வந்து அக்குழந்தையை காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர செய்துள்ளது.

இதனிடையே, கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள காலி மனையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day