தேனியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறத்தப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, விசைத்தறி தொழிலாளர்கள் 3-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டி-சுப்புலாபுரம் பகுதியில் 50 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம், 20 சதவீதம் போனஸ்  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதை சார்ந்த தொழில்களை செய்யும் 2 ஆயிரம் பேர் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்படைவதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தலையிட்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day