எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்குகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வட உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.