தேனி-தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பால் இரண்டு ஏக்கர் பப்பாளி மரங்கள் முறிந்து விழும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கியது. வருசநாடு மலை கிராமங்களில் பலத்த சூறாவளிகாற்று வீசியதில் தெய்வேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த சுபேஷ் என்பவருக்கு சொந்தமான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன. சுமார் 2 ஏக்கரில் பப்பாளி பயிரிட்டு ஆறு மாதங்கள் ஆகி காய்கள் காய்க்கும் பருவத்தில் முறிந்து விழுந்ததால் விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல மாத உழைப்பு சில வினாடிகளில் வீணாகியதால் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Night
Day