தேனி: அமோக விற்பனையை எதிர்பார்த்த பூ விவசாயிகள் ஏமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்ததால், இன்றும் விவசாயிகள் ஆண்டிப்பட்டி மலர் சந்தைக்கு பூக்களை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இன்று பூக்கள் விலை பாதியாக குறைந்ததால் பூக்களை கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 2 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி, முல்லைப்பூ 800 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. 

Night
Day