தேனி: களைகட்டிய சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ஆட்டு சந்தையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால், ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அதிக அளவிலான ஆடுகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர். விசேஷ நிகழ்ச்சிகளுக்காக விற்பனை செய்வதற்கு ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால், ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

Night
Day