தேனி: மல்லிகை செடிகளில் பச்சைப்புழு தாக்கம் அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை செடியில் பச்சைப்புழு தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கண்ணியப்பிள்ளைபட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செடியில் பச்சைப்புழுக்களின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதனிடையே பூக்களுக்கான விலையும் குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Night
Day