தேனி: வெயிலின் தாக்கத்தால் காய்கள் வெடித்து வீணாகும் பஞ்சுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான இலவம் பஞ்சு காய் வெடித்து காற்றில் பறந்து வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போடி, பெரியகுளம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் இலவம் மரம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக அறுவடைக்கு முன்பாகவே காய்கள் வெடித்து பஞ்சு பறந்து வயலிலும், ஆற்றிலும் விழுந்து வீணாகிறது. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், விதையுடன் கூடிய பஞ்சை அரசே உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day