தமிழகம்
பாம்பனில் கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி...
பாம்பனில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீர?...
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருடைய நினைவு மண்டபம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏராளமானோர் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவில், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பாம்பனில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீர?...
ஒசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்?...