தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சின்னம்மா சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில், ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதய தெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் 77வது பிறந்த தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோடநாடு எஸ்டேட்டில் 4ம் நம்பர் கேட் பகுதியில் அலங்கரித்து வைக்கபட்ட மாண்புமிகு அம்மாவின் திருவுரு படத்திற்கு கோடநாடு எஸ்டேட் அலுவலர்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

பின்னர் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் லட்டு இனிப்புகள் வழங்கி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி பேருராட்சி முன்னாள் தலைவர் வாப்பு மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர்,  தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.


Night
Day