தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் மக்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் மக்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 3 கோடியே 60 லட்சம் பூத் சிலிப்புகள் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்படும் எனக் கூறிய அவர், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் குறித்து, சம்பந்தபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றார். 

Night
Day