தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்காளர் பட்டியல் திருத்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கியதை எதிர்த்து வடபழனியைச் சேர்ந்த 70 வயதான மணி என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் - ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் பெயரை நீக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Night
Day