தேர்தல் பறக்‍கும் படையினர் அலைகழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்வதை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து, தங்களை அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாபநாசம் பகுதி விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் அச்சு வெல்லம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக சந்தைக்‍கு கொண்டு செல்கின்றனர். அவர்களை, தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதில், தேர்தல் பறக்கும் படையினருக்‍கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்‍கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day