தேர்தல் வரும்போது பார்த்து கொள்ளலாம் - துரைமுருகன்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது பற்றி பார்க்‍கலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது பொதுமக்‍களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

சட்டப்பேரவையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஏன் பணம் வழங்கவில்லை என உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்‍கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு போதிய நிதியில்லை என்று தெரிவித்தது மக்களிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து உறு​ப்பினர்கள் எழுப்பிய கேள்விக்‍கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக பேசியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தேர்தல் காலம் இல்லை என்றும், பொங்கல்பரிசுத் தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று அலட்சியமாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வரும்போது மட்டும் மக்‍களுக்காக சிந்தித்து பாடுபடுவ​து போன்று நாடகம் நடத்தி விட்டு ஆட்சிக்‍கு வந்த உடன் மக்‍களை மறந்துவிடுவது திமுகவுக்‍கு வாடிக்‍கை. இதை நி​ரூபிக்கும் விதமாக அமைந்துள்ள துரைமுருகனின் அலட்சிய பேச்சு பொதுமக்‍களை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. 

Night
Day