தேவர்குளத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மா வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவர்குளம் பகுதிக்கு சென்றபோது, நள்ளிரவை கடந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கழக தொண்டர்களும் மிகுந்த எழுச்சியுடன் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கழக நிர்வாகிகள் பிச்சை பாண்டி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் தலைமையில் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தேவர்குளம் மக்கள் சார்பாக புரட்சித் தாய் சின்னம்மாவுக்கு வீர வாள் வழங்கப்பட்டது.

தேவர்குளம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் தமிழக மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார். கழக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால், நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச்செய்ய முடியும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார். 

தேவர்குளத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரையாற்றிய பின்னர், அங்கிருந்து அவர் புறப்பட்டபோது அங்கு, 'சின்னம்மா பழமுதிர்ச்சோலை' என்ற பெயரில் பழக்கடை நடத்திவரும் பிரேம் ஆனந்த் என்பவர், சின்னம்மாவிடம் தனது கடையைக் காட்டி, சின்னம்மா அளித்த உதவியினால் அந்த கடையை தான் அமைத்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.  புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை ஒட்டி, புரட்சித்தாய் சின்னம்மா, அவருக்கு கரும்புச்சாறு இயந்திரம் வழங்கினார். அந்த உதவியைக் கொண்டு, தான் ஆரம்பித்த கடை தான், 'சின்னம்மா பழமுதிர்ச்சோலை' என பிரேம் ஆனந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர் மென்மேலும் வளர தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 


Night
Day