தேவர் திருமகனாரின் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தேவர் திருமகனார்​ நினைவிடத்தில் அவரது திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். பசும்பொன் சென்றபோதும், திரும்பி வரும்போதும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு வழிநெடுகிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையிலிருந்து மதுரை சென்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மதுரையில் அழகர் கோவில் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றார். அப்போது திரளான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து முழக்‍கங்களுடன் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தமுக்கம் தமிழன்னை சிலை பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சி முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து கோரிப்பாளையம் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது, கழகத் தொண்டர்கள் எழுச்சிமுழக்கமிட்டனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தெப்பக்குளம் பகுதியில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்றார். வழியில் திருவள்ளுவர் சிலை அருகே, மதுரை அண்ணாநகரை சேர்ந்த சந்தோஷ் - மாதவலோஷினி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ஜெயச்சந்திரன் என, புரட்சித்தாய் சின்னம்மா பெயர் சூட்டினார்.

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் - சுமதி தம்பதியினரின் பெண் குழந்தைக்கு புரட்சித்தாய் சின்னம்மா, சத்தியா என பெயர் சூட்டினார்.

புரட்சித்தாய் சின்னம்மா குழந்தைகளுக்கு பெயர் சூட்டியபோது, கழகத் தொண்டர்கள், பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத் ​தேவர் திருமகனாருக்‍கு மரியாதை செலுத்த, புரட்சித்தாய் சின்னம்மா, தொண்டர்கள் புடைசூழ, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நோக்‍கிச் சென்றார். வழியில் விரகனூர் ரிங் ரோடு அருகே புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விரகனூர் பகுதியில் குழுமியிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அஇஅதிமுகவை மீட்டெடுக்க, புரட்சித்தாய் சின்னம்மா வரவேண்டும் என வலியுறுத்தினா்.

பசும்பொன் செல்லும் வழியில், சிவகங்கை மாவட்டம் மணலூர் அருகே புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு இஸ்லாமிய பெருமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். சின்னம்மாதான் ஆட்சிக்கு வரவேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருப்புவனம் பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு தொண்டர்களும் பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் வன்னி கோட்டை பகுதிக்கு சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புரட்சித்தாய் சின்னம்மா அஇஅதிமுகவுக்‍கு தலைமை ஏற்று, தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என தங்களது விருப்பத்தை அவர்கள் தெரிவித்தனர். 2026-ல் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை உருவாக்குங்கள் என, புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பெண்கள் வலியுறுத்தினர்.

வில்லியரேந்தல் பகுதியில் பெண்களும், விவசாய தொழிலாளர்களும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு  சிறப்புமிகு வரவேற்பு அளித்தனர்.

விவசாய பெண் தொழிலாளர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சேலைகள் வழங்கி மகிழ்ந்தார்.

தொடர்ந்து, திருப்பாச்சேத்தி பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விவசாயிகளுக்கு புதிய ஆடைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு தொண்டர்களும் பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை பகுதியில் பசும்பொன் செல்வதற்காக காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகத்துடன் வரவேற்றனர். சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மானாமதுரை பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, பேருந்து நிலையம் அருகே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவ்வழியே பேருந்துகளில் சென்ற மக்கள், கைகளை அசைத்து, புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு வரவேற்பு அளித்தனர்.

புரட்சித்தாய் சின்னம்மா சென்ற இடமெல்லாம், பொதுமக்‍கள், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 'புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க' என வாழ்த்து முழக்‍கமிட்டு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

இதனைடுத்து, பார்த்திபனூர் விளக்கு பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள், மிகுந்த ஆர்வத்தோடு புரட்சித்தாய் சின்னம்மாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அடுத்து, காட்டு எமனேஸ்வரம் பகுதிக்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள் மற்றும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சின்னம்மாவுக்‍கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அங்கு குழுமியிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் காட்டு எமனேஸ்வரம் பகுதியில் குடி தண்ணீர் வசதியே இல்லை என பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் புகார் தெரிவித்தனர். வழியில் பல இடங்களில் புரட்சித்தாய் சின்னம்மா, பெண்களுக்‍கு சேலைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முத்தாதிபுரம் பகுதியில் பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு ஆளுயர மாலை அணிவித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

மணிநகரம் பகுதியில், குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு மாலைகள் அணிவித்து கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அபிராமம் பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பசும்பொன் கிராமத்திற்குச் சென்ற, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. பசும்பொன் பகுதி முழுவதும் சின்னம்மாவை சந்தித்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், புரட்சித்தாய் சின்னம்மா ஆட்சிப் பொறுப்பேற்க வரவேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். ஒவ்வொரு இடத்திலும் புரட்சித்தாய் சின்னம்மாவை பொதுமக்கள் ஆர்வமுடன் சந்தித்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார். தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழிவந்த தொண்டர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அங்கு சிறிது நேரம் அமர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா பிரார்த்தனை செய்தார்.

இதனையடுத்து, தேவர் திருமகனார் வாழ்ந்த இல்லத்தை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார். அவருக்‍கு, தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலை, நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தேவர் திருமகனார் நினைவிடப் பொறுப்பாளர் குடும்பத்தினரை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்துப் பேசினார். அவர்களிடம் நலம் விசாரித்தார். குடும்பத்தினருக்‍கு பொன்னாடை அணிவித்தார். குடும்பத்தினர் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ​பொன்னாடை வழங்கப்பட்டது.

பசும்பொன்னில் தேவர் திருமகனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், புரட்சித்தாய் சின்னம்மா திரும்பிவரும் வழியில் நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் நடனம் ஆடி, புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Night
Day