எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை அரங்கேற்றும் திமுக அரசை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அனைத்து துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தை குப்பை மாநிலமாக பார்க்கும் கேரள முதலமைச்சருக்கும், தமிழகத்திற்கான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக ஆட்சியாளர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சிவப்பு கம்பள வரேவேற்பளிப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து நாளை பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.