தொடர் கனமழை - சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலைமுதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம், சிலிகுரி, கொல்கத்தாவுக்கு புறப்படும் விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நீடித்தால் விமானங்கள் ரத்து மற்றும் காலதாமதம் மேலும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day