தொடர் கனமழை - தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் 61 புள்ளி 15  அடியை எட்டியது.  இதனால் தேனி, திண்டுக்கல் உட்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொட்டக்குடி, வீரபாண்டி உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Night
Day