தொடர் மழை : தமிழகம் முழுவதும் கடந்த 22 நாட்களில் 190 பேர்களுக்கு டெங்கு பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 4 ஆயிரத்து 410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக மழை காலங்களான செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் தற்போதே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் மே 22 தேதி வரை 4 ஆயிரத்து 410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மே மாதம் மட்டும் 22 நாட்களில் 190 நபர்கள் டெங்கு பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலரும் அச்சமடந்துள்ளனர்.

varient
Night
Day