தொடர் விடுமுறை - குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விடுமுறை என்பதால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 


குற்றாலத்தில்  ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுகிறது. மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சென்ற ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தற்போது குற்றாலத்தில் குவிந்துள்ளனர். இதனால் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பொங்கல் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Night
Day