தொண்டர்களை இன்று நேரில் சந்திக்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்களை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'ஜெயலலிதா இல்லத்தில்' இன்று நேரில் சந்திக்‍கிறார்.

அஇஅதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தி, கழக வளர்ச்சிப் பணிகளில் தொண்டர்களை ஊக்‍குவித்து, வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கழகத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்து, புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். இதன் அடிப்படையில் கடந்த 16ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள 'ஜெயலலிதா இல்லத்தில்', கழகத் தொண்டர்களை புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து, 'ஜெயலலிதா இல்லத்தில்', இன்று  பிற்பகல் 3 மணியளவில் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்களை நேரில் சந்திக்‍கிறார். அஇஅதிமுகவின் ஒற்றுமைக்‍காக முழுமூச்சுடன் பாடுபட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கரங்களை வலுப்படுத்தவும், அவரது இலட்சியத்தை நிறைவேற்றவும் கழகத் தொண்டர்கள் அனைவரும் திரண்டு வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆனந்தன் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா வழி வந்த கழகத் தொண்டர்கள் அனைவரும், புரட்சித்தாய் சின்னம்மா மீது வைத்திருக்‍கும் அளவற்ற அன்புக்‍கும், மரியாதைக்‍கும் எந்த பரிசுப் பொருளும் இணையாகாது என்பதால், புரட்சித்தாய் சின்னம்மாவை நேரில் சந்திக்‍க வரும் தொண்டர்கள் பூங்கொத்து, சால்வை, புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அளிப்பதை தவிர்க்‍குமாறு கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளனர்.



Night
Day