எழுத்தின் அளவு: அ+ அ- அ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா
வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து போராடி வரும் அன்பு சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தனது 62-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என எல்லாம் வல்லஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.