தொழில்நுட்ப கோளாறு - மெட்ரோ ரயில்கள் தாமதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை, தற்போது சீராகியுள்ளது. நேற்று இரவு சென்ட்ரலில் இருந்து விம்கோ நகருக்கு இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சிக்னல் கோளாறு காரணமாக வண்ணாரப்பேட்டையில் நிறுத்தப்பட்டது. இதனால் விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு ப்ளூ லைனில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியிலும், விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை ப்ளூ லைனில் 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல டோல்கேட் முதல் விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும் கீரின்  வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Night
Day