தொழில்வரியை 35% உயர்த்திய சென்னை மாநகராட்சி - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சி கொண்டுவந்துள்ள, தொழில் வரி மற்றும் உரிம கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரைகளை, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் ஏற்கெனவே சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, பத்திரப்பதிவுக் கட்டண உயர்வு ஆகியவற்றால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், ஏழை, எளிய, சாமானிய மக்கள் மீது ஒவ்வொரு நாளும் பாரத்தை மென்மேலும் ஏற்றி, மக்களை தொடர்ந்து கசக்கிப் பிழிவது எந்தவிதத்தில் நியாயம்? என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், சென்னை மாநகரில் அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமானம் ஈட்டுபவர்களிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியினை, தற்போது 60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களிடம் 35 சதவிகிதத்திற்கு தொழில் வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி  தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோன்று தொழில் உரிம கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளது - இது ஏழை, எளிய, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல் - இத்தகைய மக்கள் விரோத செயலுக்கு துணை நிற்கின்ற திமுகவின் ஊதுகுழலாக விளங்கும் சென்னை மாநகராட்சிக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசின் ஊழியர்கள், மாநில அரசின் ஊழியர்கள் என வருமானம் ஈட்டுவோரிடம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது - அதனை தற்பொழுது ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாகவும் உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பவும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது - மேலும், ஆறுமாத வருமானம் 60,000 ரூபாய்க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தொழில் வரியை உயர்த்தியிருப்பதன் மூலம் திமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி ஏழை, எளிய, சாமானிய மக்களை மட்டும் குறிவைத்து அவர்களை அழிக்கும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது - இது போன்ற சாமானிய மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற செயலை புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் செய்யவில்லை - கடந்த  2008 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான மைனாரிட்டி ஆட்சியில் தொழில்வரி உயர்த்தப்பட்டதை போன்று தற்போது மீண்டும் உயர்த்த நினைப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார். 

அதேபோன்று, தொழில் உரிம கட்டணமாக இதுவரை 500 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்திய தொழில்களுக்கு தற்போது 3 ஆயிரத்து 500 முதல் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது - இதன்படி, குறு தொழில்களுக்கு 3 ஆயிரத்து500 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய், சிறு தொழில்களுக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய், நடுத்தர தொழில்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய், பெரிய வணிகங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உரிம கட்டணத்தை உயர்த்தியிருப்பது, ஏழை, எளிய, சாமானிய தொழில் செய்பவர்களை நசுக்கும் செயல் என்பதை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியில் ஏற்கனவே சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, பத்திர பதிவுக்கட்டண உயர்வு போன்ற காரணங்களால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகின்றனர் - மேலும், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது - அவ்வாறு தாறுமாறாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வினை தாங்கமுடியாமல் தவிக்கின்ற ஏழை, எளிய, சாமானிய மக்களின் மீது மென்மேலும் ஒவ்வொரு நாளும் பாரத்தை ஏற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது - திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால் மக்களை தொடர்ந்து கசக்கி பிழிவது எந்த விதத்தில் நியாயம்? என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, திமுகவின் மக்கள் விரோத செயலுக்கு துணை நிற்கும் சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ள, தொழில்வரி மற்றும் உரிம  கட்டணம் உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை, ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

Night
Day