நடிகர் ஜெயராம் இல்ல திருமண வரவேற்பில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்றார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற்ற நடிகர் ஜெயராம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நடிகர் ஜெயராமின் மகனும், மணமகனுமாகிய காளிதாஸ் ஜெயராம் - மணமகள் தாரிணி காலிங்கராயர் ஆகியோரின் திருமணம் கடந்த 8ஆம் தேதி கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, நடிகர் ஜெயராம் வரவேற்றார். பின்னர், மணமக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

தொடர்ந்து, மணமக்கள் குடும்பத்தினர் அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 


Night
Day