எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா, நேற்று சேத்துப்பட்டு இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, ராமராஜன், பொன்வண்ணன், ஜோ மல்லூரி, சித்ரா லட்சுமணன், ரோபோ சங்கர் குடும்பத்தினர், இயக்குநர்கள் சேரன், ஏ.எல்.விஜய், பேரரசு, கவிஞர் சினேகன், கன்னிகா சினேகன், நடிகை சோனா மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சந்தானம், இளவரசு, கஞ்சா கருப்பு மற்றும் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், வெங்கட்பிரபு, ராம், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் சரத்குமார், அவரின் மனைவி ராதிகா சரத்குமார், நடிகர்கள் கவுண்டமணி, தாமு, நிழல்கள் ரவி, கொட்டாச்சி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் நடிகர்கள் நாசர், பருத்திவீரன் சரவணன், மிர்ச்சி சிவா, தம்பிராமையா இயக்குநர் பாண்டியராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் மனோஜ் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் சூர்யா மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், இயக்குநர் பாரதிராஜாவின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.