எழுத்தின் அளவு: அ+ அ- அ
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இயக்குநர் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மனோஜ் பாரதிராஜா உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், மனோஜ் பாரதிராஜாவின் தந்தையும் இயக்குநருமான பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பாரதிராஜாவின் கரத்தை பற்றி புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறினார்.
மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, மகனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கு இறைவன்தான் தைரியத்தை கொடுக்க வேண்டும் என கூறினார்.