எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ் திரையுலக லட்சிய நடிகரும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான மறைந்த S.S.ராஜேந்திரனின் மனைவி S.S.R.தாமரைச்செல்வி இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக அஇஅதிமுக பொது செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான மறைந்த S.S.ராஜேந்திரனின் மனைவி S.S.R.தாமரைச்செல்வி இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அம்மையார் தாமரைச்செல்வியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.