நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என எப்படி கூறலாம்? என்றும் சமூக ஆர்வலர் என தன்னை அடையாளப்படுத்துவர், எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார். நடிகை கஸ்தூரி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, கஸ்தூரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Night
Day