நடிகை கஸ்தூரி சர்ச்சைப் பேச்சுக்கு தெலுங்கர் சமூகத்தினர் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கர் சமூக பெண்களை இழிவாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெலுங்கர் சமூக மாவட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

சென்னையில் 3-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெலுங்கர் சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். 

varient
Night
Day